Sunday, May 24, 2009

Monday, May 4, 2009

Saturday, April 25, 2009

எனக்குப புரிந்தது இதுவே

எனக்குப புரிந்தது இதுவே !
-- ஏ சுகுமாரன்
யாருடனும் உன்னை ஒப்பிடாதே !
ஒவ்வருவரும் அவரவர் நிலையில் தனித்தனியே !
நீயும் உன் மகனும் கூட வேறு வேறுதான்
அவரவர் வினையை போக்கி ஞானம் பெற அவரவர் வருகிறார்கள் !உன்கடமை உனது பாத்திரம்
இப்போது தந்தை !
கொஞ்ச நாளுக்கு முன் நீயே மகன் பாத்திரத்தில் இருந்தாய் !
இருக்கும் வரை கொடுத்த பாத்திரத்தை குறைவர செய்வதே சுதர்மம் !
இதில் மற்றவருடன் உன்னை ஒப்பிடுவது
நாடகத்தில் அடுத்தவர் வசனத்தை நீபேசுவது போல் !,
அது உன் பணிஅல்ல் !
அது உன்னையே நீ அவமதித்து கொள்வது ஆகும் !
சுதர்மத்தில் வரும் தடைகளை எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது பூட்டு செய்கிறார்களா ?
எந்த பிரச்னையும் தீர்வுடன் தான் வருகிறது !
சில சமயம் சாவியை மறந்து விட்டு தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வை தேடி அலைகிறோம் !
எப்போதும் தீர்வு ,
பிரச்சனைக்கு அருகில் தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !
நீ சோகமாக இருந்தால் வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது,
கையால் ஆகாதவன் என்று !
நீ சந்தோஷமாக இருந்தால் வாழ்க்கை உன்னைப் பார்த்துமகிழ்கிறது !
நீ மற்றவரை சந்தோஷப் படுத்தினால் வாழ்க்கை உன்னைவாழ்த்துகிறது ! வணங்குகிறது !
ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின் பின்னணியிலும்
அவன் ஏறிவந்த ஒரு கடினமான சோகக் கதை இருக்கும் !
ஒவ்வொரு துயரக் கதையிலும் நிச்சயம் ஒரு வெற்றிகரமான முடிவிருக்கும் !நீ அந்த சுழற்ச்ச்யில் எங்கு இருக்கிறாயோ !
கஷ்டத்தை ஒப்புகொள் !
வெற்றிக்கு தயார் ஆகு !
மற்றவர் செய்யும் தவறுகளை பேச நமக்கு ரொம்ம ஆசைதான் !
ஆனால் நம்ம தவறுகளை நாம் உணர நமக்கு நேரமில்லை !
அதை தெரிந்து கொள்ளும் கடைசி ஆளாக நாம் தான் இருப்போம் !அனைவருக்கும் தெரிந்த பிறகுதான் நமக்கு புரியும் நம் தவறுகள் !அப்போது தெரிந்து கொண்டும் பலன் இராது !
சுற்றி யாரும் இருக்க மாட்டர்கள் நம்மை தொந்தரவு செய்ய !
தனிமையில் இனிமை !உஷாராக நாம் காலுறை அணிவது தான் புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்விரிக்க முடியுமா ?
ஊரை திருத்தப் போவதை விட நம்மை திருத்திக் கொள்ளவது மிக சுலபம் !யாரும் காலத்தின் பின்னல் சென்று நடந்த நிகழ்வின் ,மோசமான ஆரம்பத்தை மாற்ற முடியாது !
எனவே சென்றதை எண்ணி செயலிழக்க வேண்டாம் !
ஆனால் யாராலும் புதிய ஒரு மாற்றத்தால் ஒப்பில்லாத சந்தோஷ முடிவை அடைய முடியும் !
முடிந்து விட்ட பிரச்னையை பற்றி வருந்தி என்ன பயன் ?
ஒரு பிரச்சனை முடியாது என்றால் அதைக் குறித்து புலம்பி என்ன பயன் !நம்மை தேடி வரும் பிரச்னையை மகிழ்வுடன் எதிர்கொண்டு சந்தோஷத்துடன் வழியனுப்பு !
அதில் நீமட்டும் பட்டும் படாமல் இருக்க பயின்று கொள் !
தவறவிட்ட வாய்ப்புகளை எண்ணி கண்ணீரால் கண்களை குளமாக்காதே !

எதிரில் வந்து நிற்கும் நல்ல ஒரு புதிய வாய்ப்பை அந்தக் கண்களின் கண்ணீர் மறைத்து விடக்கூடும் !
முகத்தை மட்டும் மாற்றினால் ஏதாவது மாற்றம் வருமா ?
மாற்றத்தை எதிர்க் கொள்ளும் முகம் தான் மறுமலர்ச்சி தரும்
யாரைப் பற்றியும் குறையில்லை ,நாம் மாறினால் போதும் ,
வாழ்வின் இனிமைக்கு பிறரை சார்ந்து இராதீர்கள் !
மற்றவர் அயிபிராயம் உங்களுக்கு உங்கள் மன நிம்மதிக்கு நிச்சயம் தேவை ஆனால் நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்பே இல்லை !
மற்றவர்களுக்கு வேறு பல வேலை உண்டு
உங்களை மக்ழ்விப்பதை தவிர ! -------------------------------------------
இது முதலில் கவிதை அல்ல !இதை நான் எந்த புத்தகத்தை பார்த்தும் நகல் எடுக்க வில்லை !நான் நடந்து வந்த பாதையில் கண்டெடுத்த கற்கள் இவை ! பாதத்தில் தைத்த்தில் சில வைர கற்களும் உண்டு !இந்த கருத்துக்கள் எதுவும் புதியது இல்லை !பலரும் பகர்ததுவே !கொள்வோர் இருப்பின் தொடரும் உத்தேசம் உண்டு !அன்புடன் ,ஏ சுகுமாரன்
-- A.Sugumaran ,

Friday, April 24, 2009

குருவை மிஞ்சிய ஈ-குரு


ஆனால் குருவால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை
காரணம் ?oo

ஒளிப்படம்
http://video.google.com/videoplay?docid=4895271762581045075&ei=-3fySYXzGYLGwgO7l5neBg&q=deepblue&hl=en
ஆடிய ஆட்டங்கள்
http://en.wikipedia.org/wiki/Deep_Blue_versus_Garry_Kasparov

ரத்தம் ஏன் கொதிக்கிறது





உயர் இரத்த அழுத்தமுடையவர்களுக்கு ஆனந்தம்

அளிப்பதற்காகவே வந்திருக்கிறது மூச்சைச்

சீராக்குவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக்

குறைக்கும் கருவி ஒன்று.

உயர் இரத்த அழுத்தமுடையவர்கள் தங்கள் மூச்சை மெதுவாக

நன்றாக இழுத்து விடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தை

கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்

என்றும் மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவை

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் எனவும்

முன்பே ஆராய்ச்சிகள் தெரிவித்திருந்தன.
ஆனால் எந்த அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும்,

எல்லோரும் ஒரே அளவாகக் கட்டுப்படுத்த வேண்டுமா ?

என்பது போன்ற ஏகப்பட்ட நடைமுறைச் சந்தேகங்கள் இருந்தன.

சராசரியாக ஒரு மனிதன் நிமிடத்திற்கு 18 முறை மூச்சு விடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அளவு பத்துக்குக் கீழே இருக்குமாறு சுமார் 15 நிமிடங்கள் பயிற்சி எடுத்தாலே உயர் இரத்த அழுத்தத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்கின்றனர் மருத்துவர்.
இப்போது வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கருவி மூச்சை வகைப்படுத்துகிறது. ஒரு இசைக்கருவி போல இருக்கும் இதை நெஞ்சில் கட்டிக் கொண்டால் நமது மூச்சின் வேகம், நமது உடலில் தசை நார்களின் இறுக்கம் போன்றவற்றை அளவிட்டு நாம் நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுவது நல்லது என்பதை கருவி முதலில் தீர்மானம் செய்து கொள்கிறது.

அதன் பின் இதில் இணைக்கப்பட்டுள்ள ஹெட்போனில் மெல்லிய தாளலயத்துடன் இசை எழுகிறது. ஒரு தாளத்துக்கு மூச்சை உள்ளே இழுத்து அடுத்த தாளத்தில் வெளியே விடவேண்டும்.
இந்த உள்ளே – வெளியே மூச்சு விடுதல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். தேவையான அளவு இடைவெளி வந்தபின் சீராகும். இப்படி தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தாலே உயர் இரத்த அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்த கருவியை பலருக்கு சோதனை அடிப்படையில் பயன்படுத்தியதில் முடிவு மிகவும் சாதகமானதாய் இருக்கிறதாம்.
உயர் இரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் உட்கொண்டு அதன் மூலம் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி, காலம் முழுவதும் மருந்தின் அடிமையாய் நகர்வதிலிருந்து இந்த கருவி விடுதலை அளித்திருக்கிறது.
நமக்குத் தெரிந்த மூச்சுப் பயிற்சியை ஒரு கருவியின் மூலம் நவீனப் படுத்தி காப்புரிமம் வாங்கி வெளியிட்டிருக்கின்றனர் புத்திசாலிகள் என்றும் கூட இதைச் சொல்லலாம்.

Tuesday, April 21, 2009

Monday, April 20, 2009

SUSAN POLGAR

சதுரங்கத்தில் ஆண்களுக்கே தண்ணி காட்டிய என் செல்லம்
http://www.susanpolgar.com/